தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

திண்டுக்கல் மற்றும் கரூரில் கோவில் விழாக்களில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
x
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் ஆண்டியப்பட்டியில் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோவிலில் இன்று, பொங்கல் வைத்து ஆடித்திருவிழா தொடங்கப்பட்டது. இந்த விழாவில் பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய்களை உடைத்து, நேர்த்திக்கடன்களை செலுத்தினர். 

கரூர்

இதேபோல் கரூரில் உள்ள மகாலட்சுமி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடித்திருவிழாவில், சுமார் 450 பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து கொண்டு நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். இந்த விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்