பொது போக்குவரத்து சேவையில் 4 ஆயிரம் பேருந்துகள் - அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் அமர அனுமதி

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பொதுப்போக்குவரத்து தொடங்கப்பட்டு, 4 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டன.
பொது போக்குவரத்து சேவையில் 4 ஆயிரம் பேருந்துகள் - அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் அமர அனுமதி
x
ஊரடங்கிற்கு முன்னர், பொது போக்குவரத்துக்காக பெங்களூருவில் தினந்தோறும் 6 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மாநகராட்சி போக்குவரத்து கழகம்  சார்பில் முதற்கட்டமாக ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டன.  பின்னர் படிப்படியாக பேருந்து எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, தற்போது 4 ஆயிரம் பேருந்துகள்வரை இயக்கப்படுகின்றன.  இந்த மாத இறுதிக்குள் 100 சதவீத பொதுப் போக்குவரத்து உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேருந்துகளில் 30 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற விதியை மாற்றி, அனைத்து இருக்கைகளிலும்  பொதுமக்கள் அமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்