மாநிலத்துக்குள் ரயில் இயக்கவும் தயார் - ரயில்வே

மாநில அரசுகள் விரும்பினால், மாநிலத்திற்கு உள்ளேயும் ரயில்களை இயக்க தயாராக இருப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
மாநிலத்துக்குள் ரயில் இயக்கவும் தயார் - ரயில்வே
x
ஜூன் ஒன்றாம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்க உள்ள நிலையில், ரயில்வே அமைச்சகம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. ஜூன் ஒன்றாம் தேதி முதல் 200 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் பயணிக்க14 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். முன் பதிவு கால அவகாசம் 30 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் உடனடியாக உண்ணும் உணவு வகைகள் மட்டும் வழங்கப்படும், சமூக இடைவெளி கடைபிடிப்பு, உடல் வெப்ப நிலை பரிசோதிப்பு, முக கவசம், மொபைல்களில் ஆரோக்கிய செயலி ஆப் கட்டாயம் என பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 5 ஆயிரம் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றியதாகவும்,  மீண்டும் அவை சிறப்பு ரயில்கள் பெட்டிகளாக பயன்படுத்தப்படும் எனவும்  தேவைப்பட்டால், மீண்டும் அவற்றை கொரோனா வார்டாக மாற்றுவோம் என்றும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.  இதேபோல 17 ரயில்வே மருத்துவமனைகள், கொரோனாவுக்காக அர்ப்பணித்துள்ளதாகவும், ரயில்வே சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 4 நாட்களில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 260 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. தின‌மும் 3 லட்சம் பயணிகள் பயனடைகின்றனர் என்றும் ரயில்வே கூறியுள்ளது. எந்த ஒரு மாநிலமும் கேட்டுக் கொண்டால், மாநிலத்திற்கு உள்ளேயும் ரயில்களை இயக்க தயாராக இருப்பதாவும் ரயில்வே நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும் விரைவில் சொந்த ஊர்திரும்புவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ள ரயில்வே வாரியம், ஷ்ராமிக் சிறப்பு ரயில் தொடர்ந்து இயங்கும் என உறுதி அளித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்