இந்திய விமானப்படை தொழில் நுட்ப ரீதியில் சக்திவாய்ந்ததாக உள்ளது - ராஜ்நாத் சிங்

இந்திய விமானப்படை உள்பட முப்படைகளில் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பான கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது.
இந்திய விமானப்படை தொழில் நுட்ப ரீதியில் சக்திவாய்ந்ததாக உள்ளது - ராஜ்நாத் சிங்
x
இந்திய விமானப்படை உள்பட முப்படைகளில்,  உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தொழில் நுட்பத்தை  பயன்படுத்துவது தொடர்பான கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது. இதில் படைப் பிரிவில் உள்நாட்டு தயாரிப்புகளை புகுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பான  புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த புத்தகத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் விமானப்படை தளபதி தனோவா ஆகியோர் வெளியிட்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங், அண்மையில் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பதில் தாக்குதலை சுட்டிக்காட்டி பேசிய இந்திய விமானப்படை தொழில் நுட்ப ரீதியாகவும்,  படைத் திறன் மற்றும் பதில் தாக்குதல் நடத்துவது உள்ளிட்டவற்றில் சக்தி வாய்ந்ததாகவும் உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்