மம்தா பானர்ஜிக்கு ஜே' கோஷமிடாததால் அடி, உதை

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் உள்ள கல்லுரி ஒன்றில் மாணவர் சங்க விழா நடைபெற்றது. அப்போது, அம்மாநில முதலமைச்சர் 'மம்தா பானர்ஜிக்கு ஜே' என முழக்கம் எழுப்புமாறு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கூறியதாக தெரிகிறது.
மம்தா பானர்ஜிக்கு ஜே கோஷமிடாததால் அடி, உதை
x
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் உள்ள கல்லுரி ஒன்றில் மாணவர் சங்க விழா நடைபெற்றது. அப்போது, அம்மாநில முதலமைச்சர் 'மம்தா பானர்ஜிக்கு ஜே' என முழக்கம் எழுப்புமாறு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கூறியதாக தெரிகிறது. ஆனால், மாணவர்கள் முழக்கம் எழுப்பாததால், கல்லூரியின் வங்க மொழி பேராசிரியர் சுப்ரதா சட்டர்ஜி என்பவரை அறையில் வைத்து பூட்டியதுடன், அவரை அடித்து உதைத்துள்ளனர். இது தொடர்பாக, பேராசிரியர் சுப்ரதா அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில், பாஜகவினர் எழுப்பி வரும் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்துக்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்