இந்தி திணிப்புக்கு ஐ.ஆர்.எஸ் அதிகாரி பா. பாலமுருகன் எதிர்ப்பு

தமிழகத்தை சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிக்கப்படுகிறது என குற்றம் சாட்டிய சரக்கு மற்றும் சேவை வரி உதவி கமிஷனர் பா.பாலமுருகன் மத்திய அரசின் கவுரவத்தை புறக்கணித்து உள்ளார்.
இந்தி திணிப்புக்கு ஐ.ஆர்.எஸ் அதிகாரி பா. பாலமுருகன் எதிர்ப்பு
Published on
ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ஆம் நாள் இந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மத்திய அரசு அலுவலங்களில் இந்தியை பரப்பும் பிரிவின் அதிகாரிகள் கவுரவிக்கப்படுவார்கள். அந்த கவுரவம் தனக்கு வேண்டாம் என பாலமுருகன் கூறியுள்ளார். மேலும், தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளை கவுரவிக்க பரிந்துரை செய்து அதில் தமிழில் கையெழுத்திட்டு "தமிழன்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com