தமிழக எம்.பிக்களுக்கு 'இந்தி' மொழியில் கடிதம் - மத்திய அரசுக்கு, தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம்

தமிழக எம்.பி.க்களுக்கு இந்தி மொழியில் பதில் கடிதம் எழுதுவது அலுவல் மொழி சட்டத்தை அவமதிக்கும் செயலாகும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக எம்.பிக்களுக்கு இந்தி மொழியில் கடிதம் - மத்திய அரசுக்கு, தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம்
x
தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழக எம்.பிக்கள், ஏதேனும் விவரங்களை கேட்டு ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்களுக்கு இந்தியில் பதில் எழுதுவது மொழிவெறி உணர்வை வெளிப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். இது இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழிச் சட்டத்தையும் அது தொடர்பான அரசாணைகளையும் அப்பட்டமாக மீறி அவமதிக்கும் செயலாகும் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். பன்முகத்தன்மையை பாழ்படுத்தும் வகையில் இந்தி திணிப்பில் பிடிவாதமாக ஈடுபட்டுவரும் மத்திய பா.ஜ.க அரசின் மொழிவெறிப் போக்கினை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள அவர், அலுவல் மொழிச் சட்டத்தையும், தமிழகத்திற்குத் தரப்பட்டுள்ள தனிப்பட்ட உரிமையையும் பா.ஜ.க அரசு மதித்து நடக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்