"இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம் தொடர்ந்து பின்பற்றும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
x
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இருமொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம் தொடர்ந்து பின்பற்றும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மும்மொழி திட்டத்தை அகற்றி 1968-ல் அண்ணா நிறைவேற்றிய தீர்மானத்தை சுட்டிக்காட்டி உள்ள முதலமைச்சர், மும்மொழி கொள்கையை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது என்று குறிப்பிட்டுள்ளார். 

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில், மும்மொழி இடம்பெற்றிருப்பது, வேதனையும், வருத்தமும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் தங்கள் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா இந்தி திணிப்பை ஆணித்தரமாக எதிர்த்து வந்ததாகவும், இருமொழிக் கொள்கையில் அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் உறுதியாக உள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்