Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02-08-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02-08-2022) | Morning Headlines | Thanthi TV

Update: 2022-08-02 00:58 GMT

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை.... நெல்லை மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை... 

ஊட்டி மாயார் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு.... தெங்கு மரஹடா கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.....

நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப்படை.... கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நடவடிக்கை....

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.... கனமழை எதிரொலியால் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு...

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்....

கனமழை பாதிப்புகளை தவிர்க்க, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்..... மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்....

தமிழ்நாட்டில் தற்போது பெய்து வரும் மழையை சமாளிக்க முடியாமல் அரசு தடுமாறுகிறது... எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்...

கேரளாவில் தொடர் மழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை... ஆறுகளில் வெள்ளப்பெருக்கு... குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்...

கொல்லம் துறைமுகத்தில், கடல் சீற்றத்தில் சிக்கிய விசைப்படகு..... மீனவர்கள் தூக்கி வீசப்பட்ட பரபரப்பு காட்சிகள்...

கேரளாவில் கனமழைக்கு 6 பேர் பலி... 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... இடுக்கி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு....

"பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த பிறகும், கருப்பு பண​ம் உலா வருவது எப்படி...?" இந்தியாவில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது என்றும் திமுக எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு...


Tags:    

மேலும் செய்திகள்