#Breaking || இம்முறை தென் மாவட்டங்கள் தான் டார்கெட்.. இந்த இரு நாட்கள் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை மையம் தகவல்

Update: 2022-12-23 03:40 GMT

25,26 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

இந்திய வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த ஆறு மணி நேரத்தில் எந்த நகர்வும் இன்றி அதே இடத்தில் மையம் கொண்டுள்ளது.

இன்று காலை 05.30 மணி நிலவரப்படி திருகோணமலைக்கு 370 கிலோ மீட்டர் தொலைவிலும் நாகப்பட்டினத்திற்கு 480 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரிக்கடலை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக வரும் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டின் தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்