தலிபான்களிடம் வாய் விட்டு கேட்ட ஐநா சபை | TALIBAN | AFGHANISTAN

ஆப்கானிஸ்தானில், தலிபான் நிர்வாகத்துடன் ஐநா தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

Update: 2022-12-27 03:46 GMT

ஆப்கானிஸ்தானில், அரசுசாரா அமைப்புகளில் பணியாற்றும் பெண்கள், முறைப்படி ஹிஜாப் அணிய வில்லை என்றும், அதனால் அந்த அமைப்புகளில் இனி பெண்கள் பணியாற்ற தடைவிதிக்கப்படுகிறது என்றும் தலிபான்களின் பொருளாதார அமைச்சர் காரி தின் முகம்மது அறிவித்தார். இதையடுத்து, அரசு சாரா அமைப்புகள் தங்களின் பணியை தற்காலிகமாக நிறுத்தின. இதன் காரணமாக, போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் கல்வி, சுகாதாரம், குழந்தைகள் பாதுகாப்பு, ஊட்டச்சத்து வழங்கல் ஆகிய பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், காபூலில் உள்ள ஐநா உயரதிகாரி ஒருவர், தலிபான் நிர்வாகத்தினரை சந்தித்து தடையை விலக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்