"ஜெய் ஜெகநாத்.." இரு தொகுதிகளில் நவீன் பட்நாயக் வேட்புமனுத் தாக்கல் - பரபரக்கும் ஒடிசா தேர்தல் களம்

Update: 2024-04-30 12:52 GMT

ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் ஒடிசா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்... ஒடிசாவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், கஞ்சம் மாவட்டம் ஹிஞ்சிலி தொகுதியில் நவீன் பட்நாயக் வேட்புமனுத் தாக்கல் செய்தார். கன்டாபஞ்சி என்ற தொகுதியிலும் அவர் போட்டியிடவுள்ளார். 2019 தேர்தலிலும் நவீன் பட்நாயக் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்