அயர்லாந்து அணியின் நம்பிக்கை நாயகன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.!!

Update: 2022-08-17 15:58 GMT

அயர்லாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமான 38 வயதாகும் கெவின் ஓ-பிரையன், 152 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3 ஆயிரத்து 619 ரன்களும், 109 டி20 போட்டிகளில் ஆயிரத்து 973 ரன்களும் அடித்து உள்ளார். இதேபோல், ஒருநாள் போட்டிகளில் 114 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 58 விக்கெட்டுகளையும் கெவின் ஓபிரையன் வீழ்த்தி உள்ளார். கடந்த 2011ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில், இங்கிலாந்துக்கு எதிராக அதிரடியாக ஆடி வெறும் 50 பந்துகளில் சதமடித்தவர் கெவின் ஓ-பிரையன். உலகக் கோப்பை தொடரில் அடிக்கப்பட்ட அதிவேக சதமாக இன்றளவும் கெவின் ஓபிரையனின் சாதனை நீடிக்கிறது. தனது அதிரடியான ஆட்டத்தால் அந்தப் போட்டியில் அயர்லாந்தை கெவின் ஓ-பிரையன் வெற்றி பெற வைத்தது, அவரது மறக்க முடியாத ஆட்டங்களில் ஒன்றாகும்...

Tags:    

மேலும் செய்திகள்