இன்றைய தலைப்பு செய்திகள் (21-01-2023) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-01-21 18:06 GMT

Full View


அதிமுக ஒன்றிணைய, எடப்பாடி பழனிச்சாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்....இரட்டை இலை சின்னம் கோரி, வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திடுவேன் எனவும் ஓ.பி.எஸ் பேட்டி....

புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தியுடன் எடப்பாடி பழனிசாமி அணியினர் சந்திப்பு.....ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் தரப்புக்கு ஆதரவு அளிக்க கோரிக்கை...

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கே ஆதரவு என ஜான்பாண்டியன் அறிவிப்பு.....அதிமுகவின் இருதரப்பும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் விருப்பம்....

தமிழக மக்கள் முன்னேற்ற கட்சி தலைவர் ஜான்பாண்டியனுடன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு...ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்க கோரிக்கை...

கூட்டணி கட்சி தலைவர்களை முன்கூட்டியே சந்தித்த ஈ.பி.எஸ் அணி.....தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியனுடன் ஆதரவு கோரி சந்திப்பு.....

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக ஓபிஎஸ் பேட்டி...மத்திய, மாநில அரசின் நலன்கள் குறித்து பேசியதாக தகவல்... 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு...ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்க கோரியதாக தகவல்...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்

ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு...முறைப்படி நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு...

Tags:    

மேலும் செய்திகள்