செப்.11 தாக்குதலும்.. தலிபான் பதவியேற்பும்..

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்று 20 ஆண்டுகள் நிறைவு நாளில் தலிபான்கள் பதவியேற்க திட்டமிட்டுள்ளன.

Update: 2021-09-10 10:32 GMT
2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவில் இருந்த உலக வர்த்தக அமைப்பின் இரட்டை கோபுர அலுவலம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட இந்த சம்பவத்தை அடுத்து, ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்த அமெரிக்கா தலிபான்களை வெளியேற்றியது. தற்போது ஆப்கானிஸ்தானில் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய தலிபான்கள், முல்லா முகமது ஹசன் தலைமையில் புதிய அரசை அறிவித்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு நாளான செப்டம்பர் 11 அன்று, தலிபான்கள் பதவியேற்பு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்