புதிதாக பிறந்த யானைக்குட்டி - அன்புடன் அரவணைக்கும் தாய் யானை

துருக்கியின் இஸ்மிர் நகரில் உள்ள வனவிலங்குகள் பூங்காவில் புதிதாக யானைக்குட்டி ஒன்று பிறந்து உள்ளது.

Update: 2021-06-21 07:01 GMT
துருக்கியின் இஸ்மிர் நகரில் உள்ள வனவிலங்குகள் பூங்காவில் புதிதாக யானைக்குட்டி ஒன்று பிறந்து உள்ளது. பெகும்கேன் என்ற 25  வயது பெண் யானைக்கு 110 கிலோ எடையில் இந்த யானைக்குட்டி பிறந்து இருப்பதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர். புதிய யானைக்குட்டியின் வரவால் மகிழ்ச்சி அடைந்துள்ள பூங்கா ஊழியர்கள், குட்டி யானையை, தாய் யானை பாசத்துடன் அரவணைப்பதாகவும், குட்டி யானைக்கு விரைவில் பெயர் சூட்டப்படும் என்றும் கூறி உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்