உலக நாடுகளுக்கு 60 மில்லியன் தடுப்பூசி - அமெரிக்க வெளியுறவு செயலாளர் தகவல்

உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை அமெரிக்கா இரண்டு வாரங்களில் தொடங்கும் என அந்நாட்டு வெளியுறவு த்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-28 03:39 GMT
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 60 மில்லியன் தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்கும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த அமெரிக்க வெளியுறவு செயலர் ஆண்டனி பிளிங்கன்(Antony Blinken), உலகம் முழுவதும் தடுப்பூசி கிடைப்பதை அமெரிக்கா ஊக்குவிப்பதாகவும், உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி விநியோக திட்டத்தின் கீழ் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா தடுப்பூசிகளை வழங்கும் எனவும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்