ஃபுகுஷிமா அணு உலைக் கழிவு நீர்;பசிபிக்-இல் கலக்க ஜப்பான் அரசு முடிவு - மொட்டையடித்து எதிர்ப்பு தெரிவிப்பு

ஃபுகுஷிமா அணு உலைக் கழிவு நீரை பசிஃபிக் பெருங்கடலில் கலக்கும் ஜப்பான் அரசின் முடிவைக் கடுமையாக எதிர்த்த தென் கொரிய மாணவர்கள், தலை முடியை மொட்டையடித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Update: 2021-04-20 11:35 GMT
ஃபுகுஷிமா அணு உலைக் கழிவு நீரை பசிஃபிக் பெருங்கடலில் கலக்கும் ஜப்பான் அரசின் முடிவைக் கடுமையாக எதிர்த்த தென் கொரிய மாணவர்கள், தலை முடியை மொட்டையடித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஜப்பானில் 2011ம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரும் நிலநடுக்கத்தால், சுனாமி தாக்கி, ஃபுகுஷிமாவின் அணு உலைக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் உண்டான கதிர்வீச்சைக் குறைக்க பயன்படுத்தப்பட்ட லட்சக்கணக்கான டன் தண்ணீர் கழிவு நீராக மாறிய நிலையில், அதை பசிஃபிக் பெருங்கடலில் கலக்க ஜப்பான் அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பிய நிலையி, தென் கொரிய மாணவர்கள் மொட்டையடித்து நூதன முறையில் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்