வவ்வாலிடம் இருந்தும் கொரோனா பரவியிருக்காது - உலக சுகாதார அமைப்பு தகவல்

சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவவில்லை என உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Update: 2021-02-10 02:30 GMT
சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவவில்லை என  உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவின் வூகான் நகரில் உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸை உருவாக்கி சீனாதான் பரப்பியதாக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், இது குறித்த ஆராய்ச்சியில் சர்வதேச நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வூகான் சென்றிருந்த உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவினர், ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியதற்கான சாத்தியமில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், வவ்வாலிடம் இருந்தும் கொரோனா பரயிருக்காது என கூறும் நிபுணர் குழுவினர், வூகானில் உள்ள கடல் உணவு சந்தையில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் உலகத்தை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் எங்கிருந்து தோற்றியது என்பது நீடிக்கும் கேள்வியாக தொடர்கிறது. 
Tags:    

மேலும் செய்திகள்