ஆஸ்டன் வில்லா கால்பந்து மைதானம் - தடுப்பூசி போடும் மையமானது

பிரிட்டனின் ஆஸ்டன் வில்லா கால்பந்து மைதானம் தடுப்பூசி போடும் மையமாக மாற்றப்பட்டுள்ளது

Update: 2021-02-05 07:01 GMT
பிரிட்டனின் ஆஸ்டன் வில்லா கால்பந்து மைதானம் தடுப்பூசி போடும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. பர்மிங்காமில் அமைந்திருக்கும் மைதானத்தில் நாளொன்றுக்கு ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன், மக்களுக்கு தடுப்பூசி மருந்தை செலுத்துவதில் தீவிரம் காட்டுகிறது. இந்த நெருக்கடியான காலத்தில் மகத்தான பணிக்கு உதவுவதில் மகிழ்ச்சியடைகிறோம் என கால்பந்து நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்