நீட் தேர்வு... வேதனை தெரிவித்த நீதிபதி கையோடு கொடுத்த அனுமதி

Update: 2024-05-02 04:52 GMT

தீ விபத்தில் சிக்கி சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மாணவி டயப்பர் அணிந்து நீட் தேர்வு எழுத உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதியளித்துள்ளது.இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 5-ம்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் நாடு முழுவதிலிருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ள 19 வயது மாணவி ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தீ விபத்தில் சிக்கியதால் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நீட் தேர்வின்போது டயப்பர் அணிந்திருக்கவும் தேவைப்படும்போது அதை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். நீட் தேர்வு எழுதவரும் மாணவிகளிடம் வரம்பு மீறிய சோதனை நடத்தப்படுவதாக வேதனை தெரிவித்த நீதிபதி, நீட் தேர்வுக்கான ஆடை கட்டுப்பாட்டில் மாணவிகள் சானிட்டரி நாப்கின் அணிய அனுமதி வழங்கியிருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார். இந்த வழக்கில் மனுதாரரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கோரிக்கையை தேசிய தேர்வு முகமை ஏற்றுக் கொண்டுள்ளது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்