இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்ச முன்னிலை - 5 வது இடத்திற்கு தள்ளப்பட்டார் ரணில் விக்கிரமசிங்க

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ச முன்னிலை வகித்து வரும் நிலையில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

Update: 2020-08-06 16:28 GMT
இலங்கையில் நடைபெற்ற  ஒன்பதாவது நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுன கட்சியின் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச 15 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.  அவரை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசா ஒன்பது லட்சம் வாக்குகள் குறைவாக பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். 3வது இடத்தில் அனுரகுமார திசா நாயக்கவும், 4வது இடத்தில் இலங்கை தமிழ் அரசியல் கட்சியை சேர்ந்த சம்பந்தனும் உள்ளனர். இதையடுத்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க 5 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்