திடீரென சாலை மறியலில் குதித்த பெண்கள்.. பரபரப்பான மாவட்டங்கள்

Update: 2024-05-06 12:31 GMT

குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்...

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள தோளப்பள்ளி கிராமம் திருவள்ளுவர் நகர் பகுதியில் சுமார் 15 நாட்களாக சீரான குடிநீர் இல்லை என கூறப்படுகிறது... தோளப்பள்ளியில் 2 நாள்களுக்கு முன் கனமழை பெய்ததில் மரங்கள் மின்கம்பங்கள் மீது சாய்ந்து, மின்கம்பிகள் அறுந்தன... இதனால் சீரான மின்சாரம் இல்லாமல் தற்போது வரை பொதுமக்கள் தவித்து வருகின்றனர். குடிநீரும் சீராக வழங்கப்படாததால் கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் ஆவடத்தூர் காட்டிநாயகன்பட்டி எம்ஜிஆர் நகர் வளவு சவுரியூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை என குற்றம் சாட்டி காலி குடங்களுடன் சாலை மறியல் நடத்தினர்.

புதுக்கோட்டை கணக்கன்காடு ஊராட்சி வெட்டன் விடுதி ஆதிதிராவிடர் காலனியில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் வராததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் புதுக்கோட்டை கறம்பக்குடி சாலை புளியமரம் பேருந்து நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்...

குடிநீர் வழங்க கோரி ராமநாதபுரம் தட்டனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்... 70 ஆண்டுகள் இதே நிலை நிலவுவதால் தாங்கள் கூலி வேலைக்குச் செல்ல முடியாமல் திண்டாடுவதாகக் கூறி அவர்கள் போராட்டம் நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்