படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் ஊரடங்கு - மசூதிகளை திறந்த சவுதி அரேபிய அரசு

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிவாசல்கள் 2 மாத காலத்திற்கு பிறகு சவுதி அரேபியாவில் திறக்கப்பட்டுள்ளன.

Update: 2020-05-31 13:51 GMT
கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிவாசல்கள் 2 மாத காலத்திற்கு பிறகு சவுதி அரேபியாவில் திறக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து, வழிபாட்டுக்கு வருபவர்கள், முக கவசம் அணிந்து வர வேண்டும், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. சுவாச கோளாறு உள்ளவர்கள், வயதானாவர்கள் மற்றும் 15 வயதிற்குட்பட்டவர்கள் மசூதிகளுக்கு வர வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 21-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், படிப்படியாக ஊரடங்கை மூன்று கட்டமாக தளர்த்த உள்ளதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்