கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு - களை இழந்த ரமலான் கொண்டாட்டம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எகிப்து நாட்டில் இந்த ஆண்டு ரமலான் கொண்டாட்டம் களை இழந்துள்ளது.

Update: 2020-05-24 11:17 GMT
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எகிப்து நாட்டில் இந்த ஆண்டு ரமலான் கொண்டாட்டம் களை இழந்துள்ளது. தலைநகர் கெய்ரோவில்  சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கடந்த ஆண்டு ரமலான் பண்டிகையின் போது மசூதிகள் மற்றும் பொது இடங்களில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்டனர். ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக மசூதிகள் மூடப்பட்டுள்ளன. பொது இடங்களில் தொழுகை நடத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகளிலேயே ரமலான் பண்டிகையை இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்