பொழுதே போகவில்லை - ஊரடங்கு அலப்பறைகள்

ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்த நேரத்தில் பொழுதைப் போக்குவதற்கு அவர்கள் புதுப்புது வழிகளையும் கண்டுபிடித்து வருகின்றனர். அது பற்றிய தொகுப்பு ஒன்றை தற்போது பார்க்கலாம்..

Update: 2020-05-23 10:16 GMT
காரை விட்டு இறங்க மறுத்த செல்ல நாய்...

ரஷ்யாவில் சமூக இடைவெளியோடு சுற்றுலா கூட ஆரம்பித்துவிட்டது. உறை நிலையில் இருக்கும் அந்த நாட்டின் Baikal ஏரிக்கு ஒரு குட்டிப் பையன் தன் செல்ல நாயை அழைத்துப் போயிருக்கிறான். ஆனால், ஐஸ் தரையை பார்த்து பயந்த அந்த நாய், காரை விட்டு இறங்க மாட்டேன் என அழிச்சாட்டியம் பண்ணிய காட்சி இந்த உலகத்தையே ரசிக்க வைத்திருக்கிறது. கடைசியாக ஒரு சிவப்பு கம்பளத்தை விரித்த பிறகுதான் தரை இறங்கினார் இந்த வி.ஐ.பி.


கொரோனா - உதவ வந்த ஒட்டகம்...

நம்ம ஊரில் கொரோனா நிவாரணத்துக்காக மனித நேயத்தோடு பலர் உதவுகிறார்கள். ஆனால், இங்கிலாந்தில் லாமா எனும் இந்த ஒட்டகத்துக்கு கூட மனித நேயம் இக்கிறது. மலைப்பாங்கான பகுதிகளில் இந்த ஒட்டகவும் அதன் எஜமானரும் நடை பயணமாகவே சென்று நிவாரணப் பொருட்களை வீட்டு வாசலில் வைத்துவிட்டு வருகிறார்கள். இது வெறும் நிவாரணம் மட்டுமல்ல... தென்னமெரிக்காவில் மட்டுமே வாழும் இந்த லாமா விலங்கை நேரில்  பார்ப்பது வீட்டிக்குள் அடைந்து கிடப்பவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கும் என்கிறார் லாமாவின் எஜமானர் அலெக்ஸ்.


சமையல் சொதப்பினாலும் அசராத மனிதர்...

குவாரண்டைன் சமையலில் சில சமயம் அப்படி இப்படி சொதப்பத்தான் செய்யும். சப்பாத்தி மாவு உருட்டும் போது கட்டையோடு ஒட்டிக் கொண்டால் என்ன? புதுவித சப்பாத்தி செய்யலாமே என வழிகாட்டுகிறது இந்த வைரல் வீடியோ!
Tags:    

மேலும் செய்திகள்