இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணிப்பு

தெற்காசிய நாடுகளின் பொருளாதார நிலை குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியப் பொருளாதார வளா்ச்சி குறையும் என்று கூறப்பட்டுள்ளது.

Update: 2019-10-13 23:48 GMT
இந்தியாவின் வளர்ச்சி வேகம், வங்கதேசம், நேபாளத்தை விட குறைவாக உள்ளதாக உலக வங்கி கூறியுள்ளது. தெற்காசிய நாடுகளின் பொருளாதார நிலை குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள  அறிக்கையில், தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியப் பொருளாதார வளா்ச்சி குறையும் என்று கூறப்பட்டுள்ளது.  உலக வங்கி ஏற்கனவே வெளியிட்ட 7 புள்ளி 5 சதவீத  வளர்ச்சி எதிர்பார்ப்பினை குறைத்து, நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி  6 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் 2019 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி இந்தியாவை விட அதிகமாக இருக்கும் என்றும் உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்