பத்திரிகையாளர் கொலை வழக்கு : சவுதி இளவரசருக்கு தொடர்பு

பத்திரிகையாளர் ஜமால கஷோகி கொலை வழக்கில் சவுதி இளவரசருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஐ.நா.சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-20 09:57 GMT
பத்திரிகையாளர் ஜமால கஷோகி கொலை வழக்கில் சவுதி இளவரசருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஐ.நா.சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி பத்திரிகையாளர் கஷோகி இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் உயர் அதிகாரிகள் சிலருக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஐ.நா.சிறப்பு அதிகாரி ஆக்னஸ் கலாமர்ட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஐ.நா. பொதுச்செயலாளரை, அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்