சிங்கப்பூர் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.

Update: 2018-11-14 02:32 GMT
* ஆசியான் இந்தியா மற்றும் கிழக்காசிய உச்சி மாநாடு இன்றும் நாளையும் சிங்கப்பூரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நேற்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றடைந்தார். அந்நாட்டு விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

* முன்னதாக தமது பயணம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிக்கையில்,  ஆசியான் உறுப்பு நாடுகளுடனும், விரிவான இந்திய-பசிபிக் மண்டலத்துடனும் தொடர்ச்சியான, உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதன் அடையாளமாக தமது பங்களிப்பு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.  

* ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டு நாடுகளுடன் வளர்ந்து வரும் நமது பங்களிப்புக்கு புதிய உத்வேகத்தை தமது  பயணம் அளிக்கும் என்று நம்புவதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பயணத்தின் போது அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸை, பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். 
Tags:    

மேலும் செய்திகள்