இலங்கை ஜனாதிபதியுடன் பாக். ராணுவ தளபதி சந்திப்பு

முப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க அமைக்கப்பட்டு வரும் பாதுகாப்பு கல்லூரிக்கு பாகிஸ்தான் அளித்து வரும் உதவிக்கு, இலங்கை ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-01 15:56 GMT
இலங்கை ராணுவ தளபதி ரவீந்திர விஜயகுணரத்னேவின் அழைப்பின் பேரில் இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி மஹ்முத் ஹயாட், அந்நாட்டு அதிபர் மைத்ரி பாலசிறிசேனாவை நேற்று சந்தித்து பேசினார். பொலன்னறுவையில் உள்ள ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, கொள்ளுப்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் முப்படைகளின் பயிற்சிக்கான பாதுகாப்பு கல்லூரிக்கு, பாகிஸ்தான் அளித்து வரும் உதவிக்கு மைத்ரி பாலசிறிசேனா நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் நிபுணத்துவம் வாய்ந்த  விரிவுரையாளர்களை அனுப்ப வேண்டும் என்ற இலங்கை ஜனாதிபதியின் கோரிக்கைக்கு, மஹ்முத் ஹயாட் இணக்கம் தெரிவித்ததாக தெரிகிறது. இந்த சந்திப்பின் போது இருநாடுகள் இடையிலான ராணுவ பயிற்சி குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்