திமுக கவுன்சிலரின் மகள் கடத்தல்? போராட்டத்தில் குதித்த பெற்றோர்.. பரபரப்பான திண்டுக்கல்

Update: 2024-04-24 06:44 GMT

திண்டுக்கல் கட்டமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் அமுதா, குஜிலியம்பாறை பேரூராட்சி 10வது வார்டு திமுக உறுப்பினராக உள்ளார். 9 ஆம் வகுப்பு படிக்கும் இவரது மகள் நேற்று காலை பள்ளிக்கு சென்ற நிலையில் மாலை வீடு திரும்பாததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி பெண்ணின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தை முற்றுயிட்டுள்ளனர்.விரந்து வந்த காவல்துறையினர் மற்றும் ஆர்டிஓ உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்