நிலுவையில் உள்ள 553 வழக்குகள் - ஐகோர்ட் போட்ட உத்தரவு

Update: 2023-08-19 03:38 GMT

லஞ்ச ஒழிப்பு துறையில் நிலுவையில் உள்ள வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகளை, அமலாக்கத் துறையிடம் வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதியும் வழக்குகளின் முதல் தகவல் அறிக்கை, ஆவணங்களை அமலாக்கத்துறைக்கு வழங்க வேண்டுமென நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 1964-ம் ஆண்டு முதல் தற்போது வரை ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். குறிப்பாக கடந்த 2020-21ம் ஆண்டில் மட்டும் 553 வழக்குகளை லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டது. அம்மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்