எம்.ஜி.ஆருக்கு கிட்னி தந்து உதவியவர், காலமானார்

எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது அவருக்கு தனது கிட்னியை தந்து உதவிய லீலாவதி இன்று காலமானார்.

Update: 2021-11-26 10:20 GMT
எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி சக்கரபாணியின் மகள் லீலாவதி. 1984ஆம் ஆண்டு எம்.ஜி.ஆருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது அதனை அறிந்த லீலாவதி, தனது கிட்னியை தானம் கொடுத்தார். எம்.ஜி.ஆர் உணர்ச்சிவசப்படுவார் என்பதை அவரிடம் லீலாவதியின் உதவியை யாரும் சொல்லவில்லை. ஆனாலும் எம்.ஜி.ஆர் உடல்நலம் தேறிய பிறகு லீலாவதி செய்த உதவியை அறிந்து அவரை அழைத்து நன்றி தெரிவித்தார். அந்த லீலாவதி, சென்னையை அடுத்த பெருங்குடி காமராஜர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.  உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த லீலாவதி இன்று காலமானார். அவரின் உடலுக்கு பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். லீலாவதியின் உடலுக்கு சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி அஞ்சலி செலுத்தியதுடன், உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்