மாணவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி - விலக்கு பெற முயற்சித்து வருவதாக அண்ணா பல்கலைக் கழகம் தகவல்

மாணவர்களுக்கு வழங்கப்படும் நிர்வாக ரீதியான சேவைகளுக்கு ஜிஎஸ்டி விதிப்படுவதில் இருந்து விலக்கு பெற முயற்சித்து வருவதாக அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-24 13:58 GMT
மாணவர்களுக்கு வழங்கப்படும் நிர்வாக ரீதியான சேவைகளுக்கு ஜிஎஸ்டி விதிப்படுவதில் இருந்து விலக்கு பெற முயற்சித்து வருவதாக அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. கல்லூரி முடித்து வெளியே சென்ற மாணவர்கள், பல்கலைக் கழகத்தின் நிர்வாக ரீதியான சேவைகளை பெற விரும்பினால், அதற்குரிய சேவைகளுக்கான கட்டணத்துடன் ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவும் ஜிஎஸ்டி வசூலித்துக்கொள்ள தெரிவித்துள்ளதன் அடிப்படையில் தற்போது 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இதிலிருந்து விலக்கு பெற முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்