உதவி ஆய்வாளர் கொலை; விசாரணை தீவிரம் - வாக்கி டாக்கி, செல்போன் மீட்பு

ஆடு திருடும் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் உடல், அரசு முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Update: 2021-11-22 02:10 GMT
ஆடு திருடும் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் உடல், அரசு முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவியாளராக பணியாற்றி வந்த பூமிநாதன், சனிக்கிழமை இரவு  வழக்கம் போல் பணிக்கு வந்துள்ளார்.  ரோந்து பணிக்கு தமது இரு சக்கரவாகனத்தில் கிளம்பியுள்ளார். அவருடன், மற்றொரு இரு சக்கரவாகனத்தில் ஏட்டு சித்தரவேல் என்பவரும் சென்றுள்ளனர்.  இருவரும் திருவெறும்பூரை அடுத்த சின்னசூரியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள காட்டுப்பகுதியில் இருந்து, 4 பேர் இரண்டு பைக்கில், ஆடுகளை ஏற்றிக்கொண்டு சென்றனர்.  அவர்கள் ஆடு திருடும் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகித்த  பூமிநாதனும், சித்திரவேலும், அவர்களை விரட்டிச்சென்றுள்ளனர். இருவரும் தனித்தனி பைக்கில் சென்ற நிலையில், ஆளுக்கொரு திசையில் பயணித்துள்ளனர். இதற்கிடையே அந்த கும்பல் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த பள்ளத்துப்பட்டி என்ற இடத்தை கடந்த போது, அவர்களை உதவி ஆய்வாளர் பூமிநாதன் மடக்கியுள்ளார்.  அப்போது அவர்களிடம் விசாரித்த போது, 4 பேரும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து பூமிநாதன், தன்னுடன் பணியாற்றி வரும் சக காவலர்களான கீரனூரைச் சேர்ந்த சேகர் மற்றும் சித்திரவேலுவை போனில் அழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆடு திருடும் கும்பல், மறைத்து வைத்திருந்த அரிவாளால், பூமிநாதனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.வழி தெரியாமல் நீண்ட நேரம் சுற்றித்திரிந்த சேகர் மற்றும் ஏட்டு சித்திரவேலுவும், காலதாமதமாக அங்கு வந்தபோது, உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக,  திருச்சி சரக டிஐஜி, திருச்சி எஸ்பி, புதுக்கோட்டை எஸ்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 


Tags:    

மேலும் செய்திகள்