ஐ.டி. நடவடிக்கைக்கு எதிர்ப்பு - வழக்கு தள்ளுபடி

சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டதாக கூறி வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கைக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Update: 2021-10-25 13:07 GMT
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கியதாக ச‌சிகலா மீது வருமானவரித்துறை குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில் சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டதாக கூறி, ஒருசில நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்த‌து. வருமான வரித்துறையின் நடவடிக்கையை எதிர்த்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் என 14 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும், பினாமி சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியானது என்றும் வருமான வரித்துறை தரப்பில் வாதிடப்பட்டது. வருமான வரித்துறை தரப்பு விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்