பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு - கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து

கன்னியாகுமரி சுற்றுவட்டாரத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கும் வரும் நீர்வரத்து 26 ஆயிரம் கன அடியை எட்டியுள்ளது.

Update: 2021-10-17 06:57 GMT
48 அடி கொள்ளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45 புள்ளி 71 அடியாக உயர்ந்துள்ளது. 

அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரத்து  336 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 15 ஆயிரத்து 18 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 75 புள்ளி 45 அடியாக இருக்கும் நிலையில், நீர்வரத்து 9709 கன அடியாக உள்ளது. அதேநேரம் 8854 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது

சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 16 புள்ளி 24  அடியாக உயர்ந்த நிலையில் 1196 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

இதேபோன்று சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 16 புள்ளி 33  அடியாக உயர்ந்த நிலையில்  அணைக்கான நீர்வரத்து 670 கன அடியாக உள்ளது. 

மாம்பழத்துறையாறு,  முக்கடல், பொய்கை உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்