புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நிறுத்தம் - நீதிமன்றம்

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-10-11 12:06 GMT
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என கூறி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை திரும்ப பெற்று புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்றம் கடந்த 5 ஆம் தேதி உத்தரவிட்டது. இதனையடுத்து, உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33 புள்ளி 5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0 புள்ளி 5 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கிய 2019ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றது. இந்த அரசாணை ரத்து செய்யப்பட்டதை  எதிர்த்து  புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர்  சிவா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கும் வகையில்  பிறப்பிக்கப்பட்ட அரசாணை அரசியல் சாசனத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் இருப்பதாகக் கூறியுள்ளார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், இடஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய மட்டுமே உயர் நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற்றது ஏன் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பினர். மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் சட்ட விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி, தேர்தல் நடவடிக்கைகளை அக்டோபர் 21 வரை நிறுத்தி வைக்க  உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்