அத்துமீறிய குவாரி உரிமையாளர்கள்: வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு

தேனி மாவட்ட கனிமவளத் துறை அலுவலகத்தில் குவாரி உரிமையாளர்கள் தாங்களாகவே அனுமதிச் சீட்டில் சீல் வைத்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-09-21 04:09 GMT
தேனி மாவட்டத்தில் ஏராளமான கல்குவாரிகள், மணல் குவாரிகள் மற்றும் எம்சாண்ட் தயாரிக்கும் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றிற்கு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட கனிமவளத்துறை அலுவலகம் மூலமாக அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும். இந்த நிலையில் தேனி மாவட்ட கனிமவளத் துறை அலுவலகத்தில் மணல், கல் மற்றும் எம்சாண்ட் அனுமதிச் சீட்டில் குவாரிக உரிமையாளர்களே சீல் வைத்துக் கொண்டு இருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தியதாகவும் முறைகேடுக்கு காரணமாக இருந்த கனிமவளத்துறை அலுவலக அதிகாரி உட்பட மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்