வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு - ரத்து செய்யக்கோரிய வழக்கு இன்று விசாரணை

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்யக்கோரிய வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.

Update: 2021-09-21 02:49 GMT
இது தொடர்பாக, பரமக்குடியை சேர்ந்த பாலமுரளி உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த அனைத்து வழக்குகளும்  நீதிபதி துரைசாமி மற்றும் முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சாதிய ரீதியான கணக்கெடுப்புகள் முறையாக நடத்தப்படவில்லை என்றும், தேர்தல்  ஆதாயத்திற்காக 10.5 சதவீத உள் ஒதுக்கீடு  அவசர அவசரமாக  கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதிகள், இன்று செவ்வாய்கிழமைக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்