ஜெ. மரண வழக்கு - சட்டப்பேரவையில் விவாதம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என சட்டபேரவையில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2021-09-09 11:30 GMT
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என சட்டபேரவையில் வலியுறுத்தப்பட்டது.  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ சுதர்சனம் கேட்டு கொண்டார். அப்போது குறுக்கிட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில்,  சட்டப்பேரவையில் பேசுவது முறையல்ல என எதிர்ப்பு தெரிவித்தார். 

எனவே திமுக உறுப்பினர் சுதர்சனம் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து,  பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நீதிமன்ற வழக்கில் உள்ள விவரங்களை தான் சபையில் விவாதிக்கக்கூடாது, ஆனால் உறுப்பினர் சுதர்சனம், வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்றுதான் கேட்டுக்கொண்டார் என்பதால்  அவர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்