தக்காளி விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுப்பகுதிகளில் தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2021-09-06 08:36 GMT
 குறிப்பாக வீராட்சிமங்கலம் வட்டார பகுதிகளில் விவசாயிகள் தக்காளிப் பழங்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் அதிகபட்சமாக கிலோ 7 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் அதிகம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்த விவசாயிகள், தக்காளிப் பழங்களைப் பதப்படுத்தி வைக்க குளிர்பதன கிடங்கு அமைத்துத்தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அத்துடன், தங்கள் நிலத்திற்கே நேரடியாக வந்து தக்காளி சாறு பிழியும் இயந்திரங்களை வைத்து சாறு எடுக்க வேண்டும் என்றும், அதை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்