தரமற்ற சாலைகள் அமைத்ததாக புகார் - 3 பொறியாளர்கள் தற்காலிக பணி நீக்கம்

சிவகங்கை அருகே தரமற்ற சாலைகள் அமைத்த நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த 3 பொறியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2021-07-08 08:38 GMT
சிவகங்கை அருகே தரமற்ற சாலைகள் அமைத்த நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த 3 பொறியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

ஆண்டிச்சியூரணி முதல் ஒட்டானம் இடையே தரமற்ற சாலை அமைக்கப்பட்டிப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவின்படி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், சாலையின் தரம் மற்றும் அமைப்பில் குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தரமற்ற சாலைகள் அமைத்த அலுவலர்களான உதவி கோட்டப் பொறியாளர் மாரியப்பன், உதவிப் பொறியாளர் மருதுபாண்டி, தரக் கட்டுப்பாடு உதவிப் பொறியாளர் நவநீதி ஆகியோரைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்து நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பணியை செய்த தர்சன் அண்ட் கோ என்ற ஒப்பந்ததாரர் பதிவையும் அதிகாரிகள் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்