நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை - காலை 6.30 - இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்

நாளை முதல் மெட்ரோ ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-06-20 15:43 GMT
நாளை முதல் மெட்ரோ ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை 9 முதல் 11 மணி வரை, மற்றும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை, ஐந்து  நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மற்ற நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் கொரோனா விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்