டோல்கேட்டை தாக்கும் த.வா.க நிர்வாகிகள் - அடித்து நொறுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள டோல்கேட்டை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அடித்து நொறுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-03-01 11:38 GMT
 தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநாடு, அதன் நிறுவனர் வேல்முருகன் தலைமையில் நேற்று இரவு ஓமலூரில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு, தலைவாசல் நத்தகரை டோல்கேட்டுக்கு வந்த அக்கட்சியினர், ஊழியர் கோபி என்பவரை கடுமையாக தாக்கினர். தொடர்ந்து, கணினி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த தலைவாசல் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்