"சித்ராவின் நகங்கள் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு" - உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் தகவல்

நடிகை சித்ராவின் நகங்கள் ஆய்வுக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும், அதன் முடிவு ஒரு வாரத்தில் தெரிய வரும் என்றும் உயர் நீதிமன்றத்தில், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-02-06 03:03 GMT
இந்த வழக்கில்  கைது செய்யப்பட்ட சித்ராவின் கணவர் ஹேம்நாத், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது, சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகப்பட்டதாலேயே தற்கொலை செய்து கொண்டதாகவும், சித்ராவின் நகங்கள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சித்ராவின் தொலைபேசி உரையாடல், தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கைகள், பிப்ரவரி 10ம் தேதிக்குள் வந்துவிடும் என எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, வழக்கை பிப்ரவரி 11ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்