வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கை : ஜெயலலிதா பாராட்டி இருப்பார்" - மாவட்ட ஆட்சியர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், அவரது வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றும் அரசின் நடவடிக்கையை கண்டிப்பாக பாராட்டி இருப்பார் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-01-05 04:30 GMT
போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்காக அரசு மேற்கொண்ட கையகப்படுத்தல் நடவடிக்கையை எதிர்த்தும், இழப்பீடு நிர்ணயித்த உத்தரவை எதிர்த்தும்  ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் 
தீபா ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில், சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி பதில் மனு தாக்கல் செய்தார். 
இதில், ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முன்னேற்றத்துக்கு ஓய்வு இல்லாமல் உழைத்த ஜெயலலிதாவின் பங்களிப்பை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக அவரது போயல் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற  அரசு முடிவெடுத்துள்ளதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற சுற்றுச்சூழல் பாதிப்பு சான்றிதழ் எதுவும் தேவையில்லை என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து  வழக்கின் விசாரணை வரும் 11ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்