அரசு ஊழியர்கள்- ஸ்டாலின் வலியுறுத்தல்

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை அ.தி.மு.க. அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-12-31 08:15 GMT
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சரின் வாக்குறுதியை நம்பி, அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை இதுவரை ரத்து செய்யாமல், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பலன் என அனைத்தையும் பாதிக்கச் செய்யும் வகையில் துரோகம் இழைப்பதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா பேரிடருக்காக தங்களின் ஒரு நாள் ஊதியமாக 150 கோடி ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக அளித்த ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களின் நியாயமான உணர்வினை கொச்சைப்படுத்தாமல்,Card-5 வாக்குறுதி அளித்தப்படி, 5 ஆயிரத்து 68 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்