நீதிமன்ற உத்தரவுகளை துச்சமாக நினைத்தால் "ஐ.ஏ.எஸ். பதவியை பறிக்க வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம்

நீதிமன்ற உத்தரவுகளை துச்சமாக நினைத்து புறக்கணிக்கும் அதிகாரிகளின் ஐ.ஏ.எஸ். பதவியை பறிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளது.

Update: 2020-12-25 11:44 GMT
1998-ல் தாம்பரம் நகராட்சி ஆணையராக பணியாற்றிய பழனி என்பவர், டென்டர் கோராத விகாரத்தில் தனக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை எடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி எஸ். வைத்தியநாதன் அமர்வில் நடைபெற்றது. அப்போது நீதிபதி வைத்தியநாதன், விதிமீறல் கட்டிடங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை எதிர்த்து அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது குறித்த காலத்திற்குள் முடிவெடுக்க உத்தரவிட்டும், அதனை அமல்படுத்துவது இல்லை எனக் கூறினார். மேலும், இதுபோன்ற நீதிமன்ற உத்தரவுகளை துச்சமாக நினைக்கும் அதிகாரிகளின் ஐ.ஏ.எஸ். பதவியை பறிக்க வேண்டுமெனவும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நீதிமன்ற உத்தரவிற்கு கீழ்படியாமல் இருப்பது கடமையை தவறுவதற்கு சமமானது குற்றம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்