நிவர் புயல் : "இடைக்கால நிவாரணம் கூட வழங்காதது ஏன்?" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு இத்தனை நாளாகியும் இடைக்கால நிவாரணம் கூட வழங்காதது ஏன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2020-12-24 02:57 GMT
சிவகங்கை மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற தமிழகம் மீட்போம் - 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாக ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் சிவகங்கை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். அவற்றை அதிமுக அரசு செயல்படுத்தவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். சொந்த தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையே முதலமைச்சர் இன்னும் நிறைவேற்றவில்லை என்று ஸ்டாலின் புகார் தெரிவித்தார். 

தேர்தல் வர இருப்பதால் சிறுபான்மையின மக்களை ஏமாற்ற அதிமுகவினர்  திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டிய  ஸ்டாலின் , இந்த நான்காண்டு காலத்தில் சிறுபான்மையினருக்கு என்ன செய்தார்கள்  என்றும் கேள்வி எழுப்பினார். 

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடைக்கால நிவாரணம் உடனடியாக வழங்கவில்லை என்றால் தி.மு.க. விவசாய அணி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் ஸ்டாலின் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்